இடுகைகள்

படைப்பாளிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ் - Heinrich Rudolf Hertz

படம்
{இன்று (22 பெப்ரவரி 2012)  ஹெர்ட்ஸ் இன் 155வது பிறந்ததினம்  } கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஹென்றி ருடால்ப் ஹெர்ட்ஸ் ஜன்றிக் ஏர்ஃசு Heinrich Hertz ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ் ( Heinrich Rudolf Hertz பிறப்பு  1857 பெப்ரவரி 22,  இறப்பு  1894  ஜனவரி 1)    இவர் ஜெர்மன்  நாட்டைச் சேர்ந்த  இயற்பியல் (பௌதிகவியல்)   அறிவியல் அறிஞர்  ஆவர் .  ரேடியோ அலைகள்   இருப்பதை முதன் முதலில் ஆய்வின் மூலம் நிரூபித்தவர்.  மாக்ஸ்வெல்லின்   ஒளியின் மின்காந்த அலைக்  கொள்கையை விளக்கி விரிவுபடுத்தினார்.  வானொலி  அலைகளை உருவாக்கவும் கண்டறியவும் கூடிய உபகரணங்களை கட்டமைத்து  மின்காந்த அலைகளின்  இருப்பை பலரும் ஒப்பும் வண்ணம் எடுத்துக் காட்டிய முதல் அறிவியலாளர் ஆவர்.  ஆவியாதல் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.  மின்காந்தவியலில் இவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் அதிர்வெண் அலகிற்கு இவரது பெயர் ( ஹெர்ட்ஸ் ) இடப்பட்டுள்ளது.   அதிர்வெண் ...

சாண்டில்யன்

படம்
சாண்டில்யன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. இளமைப்பருவம்  பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில்பயின்றார். திருச்சி சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது தொழில் வாழ்க்கை கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி திரு. வி. க நடத்திய வார ...

புல்லாங்குழல், டி. என். சுவாமிநாதபிள்ளை, டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். நவநீதம் என். ரமணி

படம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. புல்லாங்குழல்   புல்லாங்குழல் மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி . உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி ( aero phones ) வகையைச் சேர்ந்தது. இலக்கியத்தில் புல்லாங்குழல் இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு. அமைப்பு புல்லாங்குழல், புல் இன வகையான  மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொ...

விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை - கார்ல்மார்க்ஸ்

படம்
கார்ல் மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party” என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்... முதன் முதலில் எழுந்த நூலாக கருதப்படுகின்றது. இவற்றை விட 1847 இல் எழுதப்பட்ட “வறுமையின் மெய்யியல்” எனப்படும் “Poverty of Philosophy” என்ற நூலும் கார்ல்மார்க்சின் சோசலிச கனவிற்கு வலுச்சேர்த்த அரிய படைப்புக்களாகும். மார்க்சின் வரலாற்றுப் படிநிலைக் கோட்பாடு பொருளினை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டது. அந்தவகையில் மனித வரலாற்றினை மார்க்ஸ் ஐந்து காலகட்டங்களாக பிரிப்பார். மிகவும் தொன்மையான, பின்தங்கிய நுகர்விற்காக மட்டுமே உற்பத்தி என்றிருந்த ஆதி சமூகத்தை மார்க்ஸ் ஆதி பொதுவுடமைச் சமூகம் என்கிறார். பின்னர் ...