இடுகைகள்

கவசம் | Kavasam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கந்த சஷ்டி கவசம் தமிழில் | Kantha Sasti Kavasam Tamil | English Lyrics

ஆசிரியர்: பால தேவராயன் திருச்சிற்றம்பலம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி ...

விநாயகர் கவசம் தமிழில் | Vinayagar Kavasam Tamil | English lyrics

திருச்சிற்றம்பலம் வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க, வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க, புருவம் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க தடவிழிகள் பாலசந்திரனார் காக்க (1) கவின் வளரும் அதரம் கஜமுகர் காக்க, தாலம் கணக்கிரீடர் காக்க நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க நனி வாக்கை விநாயகர்தாம் காக்க அவிர் நகை துன்முகர் காக்க வளரெழில் செஞ்செவி பாசபாணி காக்க தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க (2) காமுரு பூமுகம் தன்னைக் குணேசர் நனி காக்க, களம் கணேசர் காக்க வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த பூர்வஜர்தாம் மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலை விக்கினவிநாசர் காக்க, இதயம் தன்னைத் தோமகலும் கணநாதர் காக்க, அகட்டினைக் துலங்கு ஏரம்பர் காக்க (3) பக்கம் இரண்டையும் தராதரர் காக்க பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க, விளங்கி லிங...