இடுகைகள்

கந்த சஷ்டி கவசம் தமிழில் | Kantha Sasti Kavasam Tamil | English Lyrics

ஆசிரியர்: பால தேவராயன் திருச்சிற்றம்பலம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விநாயகர் கவசம் தமிழில் | Vinayagar Kavasam Tamil | English lyrics

திருச்சிற்றம்பலம் வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க, வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க, புருவம் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க தடவிழிகள் பாலசந்திரனார் காக்க (1) கவின் வளரும் அதரம் கஜமுகர் காக்க, தாலம் கணக்கிரீடர் காக்க நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க நனி வாக்கை விநாயகர்தாம் காக்க அவிர் நகை துன்முகர் காக்க வளரெழில் செஞ்செவி பாசபாணி காக்க தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க (2) காமுரு பூமுகம் தன்னைக் குணேசர் நனி காக்க, களம் கணேசர் காக்க வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த பூர்வஜர்தாம் மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலை விக்கினவிநாசர் காக்க, இதயம் தன்னைத் தோமகலும் கணநாதர் காக்க, அகட்டினைக் துலங்கு ஏரம்பர் காக்க (3) பக்கம் இரண்டையும் தராதரர் காக்க பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க, விளங்கி லிங

வீரமங்கை வேலு நாச்சியார்

படம்
இராமநாதபுரத்தின் வீரமங்கை வேலு நாச்சியார் பற்றிய வரலாற்று தகவல்..! தமிழ்.களம் Thamil.Kalam  இல் இருந்து பெறப்பட்டது எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல , மாபெரும் படைகளை எதிர்கொண் டு வீழ்த்திய வீரம். ‘ சக்கந்தி ’’ இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம். வாள்வீச்சு , அம்பு விடுதல் , ஈட்டி எறிதல் , குதிரையேற்றம் , யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி

ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ் - Heinrich Rudolf Hertz

படம்
{இன்று (22 பெப்ரவரி 2012)  ஹெர்ட்ஸ் இன் 155வது பிறந்ததினம்  } கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஹென்றி ருடால்ப் ஹெர்ட்ஸ் ஜன்றிக் ஏர்ஃசு Heinrich Hertz ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ் ( Heinrich Rudolf Hertz பிறப்பு  1857 பெப்ரவரி 22,  இறப்பு  1894  ஜனவரி 1)    இவர் ஜெர்மன்  நாட்டைச் சேர்ந்த  இயற்பியல் (பௌதிகவியல்)   அறிவியல் அறிஞர்  ஆவர் .  ரேடியோ அலைகள்   இருப்பதை முதன் முதலில் ஆய்வின் மூலம் நிரூபித்தவர்.  மாக்ஸ்வெல்லின்   ஒளியின் மின்காந்த அலைக்  கொள்கையை விளக்கி விரிவுபடுத்தினார்.  வானொலி  அலைகளை உருவாக்கவும் கண்டறியவும் கூடிய உபகரணங்களை கட்டமைத்து  மின்காந்த அலைகளின்  இருப்பை பலரும் ஒப்பும் வண்ணம் எடுத்துக் காட்டிய முதல் அறிவியலாளர் ஆவர்.  ஆவியாதல் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.  மின்காந்தவியலில் இவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் அதிர்வெண் அலகிற்கு இவரது பெயர் ( ஹெர்ட்ஸ் ) இடப்பட்டுள்ளது.   அதிர்வெண்  = சுற்றுகள்/விநாடி  .(குறியீடு: (Hz), உதாரணம்: 10  ஹெர்ட்ஸ்  =  10 Hz) ஹெர்ட்ஸ் இன் கையெழுத்துடனான படம் இளமையும் கல்வியு

சாண்டில்யன்

படம்
சாண்டில்யன் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. இளமைப்பருவம்  பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில்பயின்றார். திருச்சி சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார். செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது தொழில் வாழ்க்கை கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி திரு. வி. க நடத்திய வார இதழ்