விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை - கார்ல்மார்க்ஸ்

கார்ல்மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party” என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்...

முதன் முதலில் எழுந்த நூலாக கருதப்படுகின்றது. இவற்றை விட 1847 இல் எழுதப்பட்ட “வறுமையின் மெய்யியல்” எனப்படும் “Poverty of Philosophy” என்ற நூலும் கார்ல்மார்க்சின் சோசலிச கனவிற்கு வலுச்சேர்த்த அரிய படைப்புக்களாகும். மார்க்சின் வரலாற்றுப் படிநிலைக் கோட்பாடு பொருளினை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டது. அந்தவகையில் மனித வரலாற்றினை மார்க்ஸ் ஐந்து காலகட்டங்களாக பிரிப்பார்.

மிகவும் தொன்மையான, பின்தங்கிய நுகர்விற்காக மட்டுமே உற்பத்தி என்றிருந்த ஆதி சமூகத்தை மார்க்ஸ் ஆதி பொதுவுடமைச் சமூகம் என்கிறார். பின்னர் இலாப நோக்குடைய வாணிப உற்பத்திகளுடன் தனிச்சொத்துரிடையின் செல்வாக்குக்கு உட்பட்ட சமூகம் ஒன்று தோன்றுகின்றது. இதில்அடிமைகள், அடிமைச் சொந்தக்காரர்கள் என்ற இரண்டு வகுப்புக்களை மார்க்ஸ் குறிப்பிடுவார். இச்சமூகமும் இதனால் அடிமைச்சமூகம் என மார்க்சினால் குறிப்பிடப்படுகின்றது.

பின் வந்த காலங்களில் இலாப நோக்குடைய வணிக உற்பத்தியில் உற்பத்தி நிலப்பரப்புக்கள் அதிகரித்துச் சென்றதுடன் அவற்றிற்கு உரித்துடைய பிரபுக்களும் தோன்றினர். பிரபுக்களின் இப்பாரிய பண்ணை நிலங்களில் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இச்சமூகத்தினைநிலமானிய சமூகம் என்பார் மார்க்ஸ். பண்ணைப் பொருளாதாரம் தோற்றம் பெற்றதுடன் உழைப்பாளர்களின் ஊதியக் கோரிக்கைகளும் தோற்றம் பெற்றன. இதனை அடுத்துவந்த காலப்பகுதியில் புதிய தொழில்நுட்ப விருத்தியுடன்முதலாளித்துவம் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து தொழிலாளர் வறுமையும் அரம்பித்தது. இதனை முதலாளித்துவ சமூகம் என கார்ல்மார்;ஸ் குறிப்பிடுவார்.

முதலாளித்துவம் தனது சொந்த முறன்பாடுகளாலேயே அழியும் என்பதுடன் அது உழைப்பாளருக்கு கிடைத்த வெற்றியாகவும் அமையும் என்பது மார்க்சிசத்தின் அடிப்படையானது. கார்ல்மார்ச்சின் எதிர்பார்ப்பான சோசலிச சமூகத்தை அவர் ஐந்தாவது மனித சமூகமாக குறிப்பிடுவார். ஒரு சோசலிச சமூகத்தில் அனைவருக்கும் உழைப்பு ஏற்ற ஊதியம் கிடைக்கும், அங்கு பொருள் படைத்தவன், பொருளற்றவன் என்ற வேற்றுமைகள் அருகியிருக்கும் என்கிறது மார்க்சிசம். கார்ல்மார்க்ஸ் குறிப்பிடும் மற்றுமொரு விடையமாக சமூக வகுப்புக்கோட்பாடு விளங்குகின்றது.

வரலாற்றுப்படிநிலை தோறும் அவர் குறிப்பிடும் ஒவ்வொரு சமூகங்களிடையேயும் வேறுபட்ட இரு சமூக வகுப்புக்களை மார்க்ஸ் காண்கிறார். அடிமைச்சமூகத்தில் அடிமைகள், அடிமைச்சொந்தக்காரர்கள் எனவும் நிலமானிய முறைச்சமூகத்தில் நிலப்பிரபுக்கள், பணியாளர்கள் எனவும் முதலாளித்துவ சமூகத்தில் முதலாளி, தொழிலாளி எனவும் மார்க்ஸ் தனது சமூக வகுப்புக்கோட்பாட்டினை விளக்குகிறார். வரலாற்றுப்படிநிலை தோறும் இவ்விரு வேறுபட்ட குழுக்களுக்கும் இடையே உறவுகள் என்பது முறன்பாடுடையதாகவே இருக்கும் என குறிப்பிடும் கால்மார்க்ஸ் இவையே போராட்டங்களாக வெடிக்கும் எனவும் இவ்வகுப்புப் போராட்டங்களே சமூக மாற்றத்திற்கான ஒரு செயற்றிட்டங்களாக அமையும் என்கிறார்.

இதனால் மார்க்ஸ் வர்க்க முறன்பாட்டை தோற்றுவிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு. கார்ல்மார்க்சை பொறுத்தவரை மூன்றாவதாக பார்க்கவேண்டிய ஒரு விடையம் அவரது “அன்னியமாதல்” கோட்பாடு. முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீளான மனித நிலையினை மார்க்ஸ் இதனூடாக அழகாக சித்திகரித்தார். தொழிலாளி தன் உழைப்பை தருகிறான் தன் வாழ்கையையே இந்த உற்பத்திக்காக அர்ப்பணிக்கிறான். ஆனால் அவனது உழைப்பு அவனில் இருந்தும் அன்னிப்பட்டதாக இருக்கிறது. அதுவே அவனக்கு எதிரான விசையாகவும் மாற்றமடைகின்றது. இறுதியில் அவனை வறட்சி நிலைக்கு இட்டுச்சென்றுவிடுகின்றது. அவ்வாறு அன்னியமாதலை குறிப்பிடும் கார்ல்மார்க்ஸ் நவீன தொழில்நுட்பமே அன்னியமாதலை அகற்றும் எனவும் குறிப்பிடுகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்

தைப்பொங்கல்