ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ் - Heinrich Rudolf Hertz


{இன்று (22 பெப்ரவரி 2012) ஹெர்ட்ஸ் இன் 155வது பிறந்ததினம் }

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹைன்ரிக் ருடால்ஃப் ஹெர்ட்ஸ் (Heinrich Rudolf Hertz பிறப்பு 1857 பெப்ரவரி 22,  இறப்பு  1894  ஜனவரி 1)  
இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் (பௌதிகவியல்)  அறிவியல் அறிஞர் ஆவர்ரேடியோ அலைகள் இருப்பதை முதன் முதலில் ஆய்வின் மூலம் நிரூபித்தவர். மாக்ஸ்வெல்லின் ஒளியின் மின்காந்த அலைக் கொள்கையை விளக்கி விரிவுபடுத்தினார். வானொலி அலைகளை உருவாக்கவும் கண்டறியவும் கூடிய உபகரணங்களை கட்டமைத்து மின்காந்த அலைகளின் இருப்பை பலரும் ஒப்பும் வண்ணம் எடுத்துக் காட்டிய முதல் அறிவியலாளர் ஆவர். ஆவியாதல் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். மின்காந்தவியலில் இவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து போற்றும் வண்ணம் அதிர்வெண் அலகிற்கு இவரது பெயர் (ஹெர்ட்ஸ்) இடப்பட்டுள்ளது.

 அதிர்வெண் = சுற்றுகள்/விநாடி 
.(குறியீடு: (Hz), உதாரணம்: 10 ஹெர்ட்ஸ் =  10 Hz)

ஹெர்ட்ஸ் இன் கையெழுத்துடனான படம்

இளமையும் கல்வியும்.

ஹெர்ட்ஸ் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கட்சவ் ஃபெர்டினன்ட் ஹெர்ட்ஸ் இவர் ஒரு எழுத்தாளராகவும் செனட்டராகவும் இருந்தார். தாயார் அன்னா எலிசபெத். இவருடன் பிறந்தோர் மூன்று தம்பிகளும் ஒரு தங்கையும் ஆவர்.சிறுவயது முதலே அறிவியலிலும் மொழியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஹெர்ட்ஸ் அராபியம்சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றார்.ட்ரெச்டென்முனிச்பெர்லின் பல்கலைக் கழகங்களில் அறிவியலையும் பொறியியலையும் கற்றுத் தேர்ந்தார்.

1880-ல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்.
1883 -ல் கைல் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளர் ஆனார்.
1885 -ல் கார்ல்ஸ்ரூஹே பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளரகப் பணியாற்றும் போது அவர் மின்காந்த அலைகளைக் கண்டு பிடித்தார்.

இவரின் துறைகள் இயற்பியல் (பௌதிகவியல்), மின்னணு பொறியியல் ஆக இருந்தன. மின்காந்த கதிர்வீச்சு, ஒளிமின் விளைவு பற்றி தெரிந்து வைத்திருந்தார். இவருக்கு ஜெர்மன அரசு இவரின் படத்துடன் முத்திரை வெளியிட்டது. இவர் 1894 இல் ஜெர்மனியில் இறந்தார். இவரின் கண்டுபிடிப்புகள் இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு அடிக்கல்லாக விளங்குகிறது.

ஹெர்ட்ஸ் இன் பட முத்திரை


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்

தைப்பொங்கல்