ஜிம்னாஸ்டிக் பிறந்த கதை

ஆரோக்கியமான உடல்வாகு தான் ஆரோக்கியமான உள்ளங்கள் உருவாக அடித்தளமாகின்றன. சரீர சக்தியை பெற்றுத் தரும் சமவேளையில் மனோவலிமையையும் ஈட்டத்தக்க ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதில் தீவிரமாகத் திளைத்த முன்னோர்கள் கண்டு பிடித்த விளையாட்டுக் கலைதான் ஜிம்னாஸ்டிக் எனும் கலை.

விளையாட்டுக்க
ளின் மூலகர்த்தாக்கள் கிரேக்கர்கள் எனும் நம்பிக்கைக்கு சரித்திரங்களும் சான்று பகர்கின்றன. நவீன விளையாட்டுக்களின் அசைவுகளை நோக்குமிடத்து அவையாவும் அன்றைய அன்றாட செயற்பாடுகளின் பரிணாமமே என்று எண்ணத் தோன்றுகிறது.

நவீன சமூக அமைப்பில் இன்று நாம் காணும் ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கை முறை அன்று
மிகவும் தீவிரமாகக் காணப்பட்து. ஒருவரை ஒருவர் வெல்ல மக்களுக்கு அன்று சண்டைப் பயிற்சிகள் தேவைப்பட்டன. இவற்றுள் அடங்கிய செயற்பாடுகள் காலப் போக்கில் ஜிம்னாஸ்டிக் எனும் கலைக்கு வித்திட்டன.

ஜிம்னாஸ்டிக்
கலை ஆரம்ப காலத்தில் நிர்வாண நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டது. அதனால் இது அன்று ‘நிர்வாணக் கலை’ எனும் பொருள்பட ‘ஜிம்னோர்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. இந்தக் கலை ஆரம்ப காலத்தில் ஆண்களுக்கென மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. பின் காலப்போக்கில் பெண்களும் இக் கலையில் ஆர்வம்கொள்ள ஆரம்பித்தனர். அன்று யுத்தம் புரிய வலிமையான இளம் சமுதாயமொன்று தேவைப்பட்டது.

வலிமை மிக்க சமுதாயமொன்று உருவாக வேண்டுமானால் வலிமையுள்ள அன்னையர் சமூகமொன்று அவசியம் என்
ற நிலைப்பாடு அன்றைய கிரேக்கத்தில் நிலவியது. இதன் அடிப்படையிலேயே பெண்களின் பங்களிப்பு ‘ஜிம்னாஸ்டிக்’ கலையில் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஜிம்னாஸ்டிக் கலை சாதாரண மக்களிடம் மட்டுமன்றி கிரேக்க புத்திஜீவிகள் மத்தியிலும் பெரும் வரவேற்புப் பெ
ற்று விளங்கியது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு ஜிம்னாஸ்டிக் கலை மீது உலகம் இன்று மிகுந்த ஆர்வம்கொள்ள ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இந்தியா, பல்கேரியா போன்ற நாடுகள் மத்தியில் ஜிம்னாஸ்டிக்கின் ஆதிக்கம் பெருகி உள்ளது.
ஜிம்னாஸ்டிக் விளையாட்டு என்பது விளையாட்டுத் துறையில் ஈடுபடும் ஒருவருக்கு உயரிய பல பண்புகளையும் உணர்வுகளையும் பெற்றுக்கொடுக்கிறது. சிறந்த மனோபாவம் வளரவும் இது உதவி செய்கிறது.

பெண்களைப் பொறுத்தவரையில் ஜிம்னாஸ்டிக் கலையில் அவர்கள் பேரார்வம் கொள்ள முக்கிய காரணமொன்று உள்ளது. இயற்கை அவர்களுக்கு வழங்கியுள்ள உடலைக் கட்டுக் கோப்பாகவும் எழில் கலையாமலும் ஆரோக்கியத்துடனும் பேணிக் காக்க தன்னையறியாமலே உதவும் ஒரு விளையாட்டுக் கலையாக அமைந்துள்ளதே இந்த இரகசியமாகும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்

தைப்பொங்கல்