புல்லாங்குழல், டி. என். சுவாமிநாதபிள்ளை, டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். நவநீதம் என். ரமணி


புல்லாங்குழல் 
புல்லாங்குழல்
மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது.


இலக்கியத்தில் புல்லாங்குழல்
இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.


அமைப்பு
புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி
புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.


வாசிக்கும் முறை
குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.
புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.


பல்வேறு குழல்கள்
மேலைத்தேய புல்லாங்குழல்

உலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன.


பிரபல புல்லாங்குழல் மேதைகள்

டி. ஆர். மகாலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

டி. ஆர். மகாலிங்கம் 
தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (1923 – 1978) 1940 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர்பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.

வாழ்க்கைக் குறிப்பு
மதுரை மாவட்டம்சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழ வந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கம் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம்எஸ்.சி.கிருஷ்ணன்எம். கே. தியாகராஜ பாகவதர்மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.
பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்து போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடிக்க கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெட்கட்ராமன் இசை அமைத்த பாடலை பாடியபடியே அறிகமானார் மகாலிங்கம். கிருஷ்ணரைப் பற்றி தமிழ்இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவலக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.

நடித்த திரைப்படங்கள்

  • நந்தனார்
  • சின்னதுரை
  • தெருப்பாடகன்
  • விளையாட்டு பொம்மை
  • மோகன சுந்தரம்
  • மச்ச ரேகை
  • நாம் இருவர்
  • ஸ்ரீவள்ளி
  • பவளக்கொடி
  • ஆதித்தன் கனவு
  • ரத்தினபுரி இளவரசி
  • ஆடவந்த தெய்வம்
  • அபலை அஞ்சுகம்
  • மணிமேகலை
  • அமுதவல்லி
  • ஸ்ரீவள்ளி (சிவாஜி கணேசனின்)
  • திருவிளையாடல்
  • ராஜராஜ சோழன்
  • அகத்தியர்
  • திருமலை தெய்வம்
  • கவலையில்லாத மனிதன்
  • திருநீலகண்டர்
  • தந்தைக்குப்பின் தமையன்
  • பண்ணையார் மகள்
  • என்னைப் பார்
  • மாலையிட்ட மங்கை
  • ஞான செளந்தரி
  • லைலா மஜ்னு
  • வேலைக்காரன்
  • தயாளன்
  • பிரகலாதா
  • மனோன்மணி
  • வேதாள உலகம்
  • மாயாவதி
  • ஸ்ரீகிருஷ்ண லீலா


மேற்கோள்கள்

டி. ஆர். நவநீதம்

இதேபோல், பாடகிகள் நீலா ராம்கோபால், ரமாரவி ஆகியோர் 'சங்கீத கலா ஆச்சார்யா' விருதுக்கும், கஞ்சிரா கலைஞர் மாயவரம் சோமசுந்தரம், புல்லாங்குழல் கலைஞர் டி.ஆர்.நவநீதம் ஆகியோர் 'டி.டி.கே.விருது'க்கும், திருவனந்தபுரம் சுப்பிரமணிய சர்மா 'பாப்பா வெங்கடராமையா விருது'க்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகள், அகாடமியின் 85-வது ஆண்டு இசைவிழா நிறைநாளான அடுத்த ஆண்டு (2012) ஜனவரி மாதம் 1ஆம் தேதி வழங்கப்படும்.


டாக்டர் என்.ரமணி
டாக்டர் என்.ரமணி - 1998. பிரபல குழல் கலைஞர் டி.ஆர்.மகாலிங்கத்தின் மாணவர் ஆவார்.

http://www.inbaminge.com/t/carnatic/Sri%20N%20Ramani/ இந்த இணைப்பை அழுத்துவதன் மூலம் என் . ரமணி யின் புல்லாங்குழல் இசையை கேட்கலாம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்

தைப்பொங்கல்