இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை - கார்ல்மார்க்ஸ்

படம்
கார்ல் மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party” என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்... முதன் முதலில் எழுந்த நூலாக கருதப்படுகின்றது. இவற்றை விட 1847 இல் எழுதப்பட்ட “வறுமையின் மெய்யியல்” எனப்படும் “Poverty of Philosophy” என்ற நூலும் கார்ல்மார்க்சின் சோசலிச கனவிற்கு வலுச்சேர்த்த அரிய படைப்புக்களாகும். மார்க்சின் வரலாற்றுப் படிநிலைக் கோட்பாடு பொருளினை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டது. அந்தவகையில் மனித வரலாற்றினை மார்க்ஸ் ஐந்து காலகட்டங்களாக பிரிப்பார். மிகவும் தொன்மையான, பின்தங்கிய நுகர்விற்காக மட்டுமே உற்பத்தி என்றிருந்த ஆதி சமூகத்தை மார்க்ஸ் ஆதி பொதுவுடமைச் சமூகம் என்கிறார். பின்னர்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம் . 1. திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை. 2. நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது. 3. முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. 4. நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும். 5. நீதி வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும். 6. திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் ப