இடுகைகள்

நவம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலம்புரி, வலம்புரி விநாயகர், ஸ்வஸ்திகம் நந்தியாவர்த்தம்

படம்
http://www.visvacomplex.com/Valampuri_1.html , http://www.visvacomplex.com/Valampuri_2.html , http://www.visvacomplex.com/Valampuri_3.html இணைப்பில் இருந்து....................... வலம்புரி PART - 1 வலம்புரி சங்கு சங்கநிதி பதுமநிதி கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி JayBee                         சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தைத் தாங்கியிருப்பது. சங்குகளில் பல இனங்க ள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றை கூறுவார்கள்.                         சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். வலம்புரி                             

மனப்பெண் - பாரதியார் - கவிதை

மனப்பெண் மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய் ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் தொட்டதை மீள மீளவுந் தொடுவாய் புதியது காணிற் புலனழிந் திடுவாய் புதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய் அடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல் பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் பழமையே யன்றிப் பார்மிசை யேதும் புதுமைகா ணோமெனப் பொருமுவாய், சிச்சி! பிணத்தினை விரும்புங் காக்கையே போல அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய். அங்ஙனே என்னிடத் தென்று மாறுத லில்லா அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய் கண்ணினோர் கண்ணாய்க் காதின் காதாய்ப் புலன்புலப் படுத்தும் புலனா யென்னை உலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய், இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய், இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய், இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய், இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய், தன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக் காணவே வருந்துவாய், காணெனிற் காணாய், சதத்

தமிழ்

படம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. முதன்மைக் கட்டுரை: தமிழ் மொழி வரலாறு தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003 ). [4] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200