இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜிம்னாஸ்டிக் பிறந்த கதை

படம்
ஆரோக்கியமான உடல்வாகு தான் ஆரோக்கியமான உள்ளங்கள் உருவாக அடித்தளமாகின்றன. சரீர சக்தியை பெற்றுத் தரும் சமவேளையில் மனோவலிமையையும் ஈட் டத்தக்க ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதி ல் தீவிரமாகத் திளைத்த முன்னோர்கள் கண்டு பிடித்த விளையாட்டுக் கலைதான் ஜிம்னாஸ்டிக் எனும் கலை. விளையாட்டுக்க ளின் மூலகர்த்தாக்கள் கிரேக்கர்கள் எனும் நம்பிக்கைக்கு சரித்திரங்களும் சான்று பகர்கின்றன. நவீ ன விளையாட்டுக்களின் அசைவுகளை நோக்குமிடத்து அவையாவும் அன்றைய அன்றாட செயற்பாடுகளின் பரிணாமமே என்று எண்ணத் தோன்றுகிறது . நவீன சமூக அமைப்பில் இன்று நாம் காணும் ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கை முறை அன்று மிகவும் தீவிரமாகக் காணப்பட்து. ஒருவரை ஒருவர் வெல்ல மக்களுக்கு அன்று சண்டைப் பயிற்சிகள் தேவைப்பட்டன. இவற்றுள் அடங்கிய செயற்பாடுகள் காலப் போக்கில் ஜிம்னாஸ்டிக் எனும் கலைக்கு வித்திட்டன. ஜிம்னாஸ்டிக் கலை ஆரம்ப காலத்தில் நிர்வாண நிலையிலேயே மேற்கொள்ளப்ப ட் டது. அதனால் இது அன்று ‘நிர்வாணக் கலை’ எனும் பொருள்பட ‘ஜிம்னோர்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. இந்தக் கலை ஆரம் ப காலத்தில் ஆண்களுக்கென மட்டுமே ஒதுக்கப்பட்டிரு ந்தது. பின

மணிமேகலை (காப்பியம்)

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காபியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒருப் புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் தனதுத் தோழியும் பூப்பரிக்கச் சென்றிருந்தப்போது, உதயகுமரன் என்றச் சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதலில் விழுந்தான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிப்பள்ளவம் என்றத் தீவில் கொண்டேவிட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒருப் புத்தப் பீடத்தில் அமர்ந்துத் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன்பிறகுக் கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மனிப்பள்ளவத்திற்கு அழைத்து வரப்பட்டால் என்பதைக் கூறி, முன்று அதிசிய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள எழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமே

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை

படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் , தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார் . கட்டபொம்மன் பெயர் காரணம் அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் ( இன்றைய ஒட்டபிடாரம் ) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் ( நாயக்க வம்சம் ) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெ ட்டி பொ ம்மு ( தெலுங்கு ) இடம்பெற்றிருந்தார் . இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம் , பெல்லாரி ஆகும் . வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொ ம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று . ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர் . இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் . இந்த பொம்மு மரபில் வந்தவர்களே ( திக்குவிசய கட்டபொம்மன் ) ஜெகவீர கட்டபொம்மன் , ஆறுமகத்தம்மாள் தம்பதியர் . இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார் . இவர் நாயக்கவம்ச அரசாட்சியில